Kanchi Thalaivan Karunai Vizhigal
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
Audible会員プラン 無料体験
-
ナレーター:
-
K. Padmanabhan
このコンテンツについて
"அத்தி பூத்தாற் போல்" என்ற சொல் வழக்கம் ஒன்று நம் தமிழர் பண்பாட்டில் உண்டு. அதாவது அத்திப்பூ 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் என்பது பல ஆன்றோர்களின் கருத்தாகும்.
எனவே அந்த அத்தி மரத்தால் ஆன "அத்தி வரதரும்" சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை "அனந்த சரஸ்" குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் கொடுப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது! ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழுங்கு முறைக்கு உட்படுத்துவதே ஆன்மீகம். உலகம் முழுவதும் ஆன்மீகம் பல்வேறு மதங்கள் மற்றும் சம்பிரதாயம் மூலமாக, தங்கள் கடமைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றச் செய்து, நடைமுறைப் படுத்தப்படுகிறது. நம் பாரத நாடு பண்பாட்டு ரீதியில் பல ஆன்மீக கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், பன்னிரு ஆழ்வார்களும், இராமானுஜரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக அவர்களது படைப்புகளும், போதனைகளும் ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளன.
தற்போது எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் வராஹ மஹாதேஸிகன் ஸ்வாமிகள் என் மீது கருணை மழைப் பொழிந்து, கருணைக் கொண்டு என் பெயரை "காஞ்சிநேசன்" என்று செல்லமாக அழைப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய ஆச்ரம அலுவல்கள் ஆயிரத்திற்கு இடையே இந்த சிறியேனின் தொகுப்பு நூலான "காஞ்சிதலைவன் கருணைவிழிகள்" என்னும் நூலுக்கு ஸ்ரீமுகம் தந்து ஆசீர்வதித்துள்ளது அடியேனுக்கு கிட்டிய பாக்கியமாகக் கருதுகிறேன். அவருடைய பாதகமலங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வந்தனங்கள்.
Please note: This audiobook is in Tamil.
©2018 Elanagar Kanchinathan (P)2019 Pustaka Digital Media Pvt. Ltd.