Men Kalaigal [Soft Arts]
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
Audible会員プラン 無料体験
-
ナレーター:
-
Girija Raghavan
-
著者:
-
N. Chokkan
このコンテンツについて
'ஆய கலைகள் 64' என்று சொல்வார்கள். நடனம், பாட்டு, தையல் வேலை, விடுகதை, வசனம், தோட்ட வேலை என்று தொடர்கிற இந்தக் கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்களுக்குதான், அந்தக் காலத்தில் மரியாதை.
அன்றைக்கு ‘ஆய கலைகள்' என்றால், இன்றைக்கு ‘மென் கலைகள்'. ஆங்கிலத்தில் 'Soft Skills' என்று அழைக்கப்படும் இந்த நவீன கலைகள்தான், இன்றைய நாகரிக வாழ்க்கையில் ஒரு தனி நபரின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.
பலரும் நினைப்பதுபோல், இந்த மென் கலைகள் அலுவலகச் சூழலுக்குமட்டும் சொந்தமில்லை. வீட்டிலும், நமது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களிலும்கூட இவற்றைப் பயன்படுத்திப் பெரிய அளவில் பயன் பெறமுடியும்.
நவீன வெற்றி சூத்திரங்களான இந்த மென் கலைகளில் முக்கியமான சிலவற்றையும், அவற்றில் நாம் கைதேர்ந்தவர்களாவதற்கான ப்ராக்டிகள் டிப்ஸ் பலவற்றையும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்வோம்!
இந்தச் சூத்திரங்களைத் தனித்தனியே சிறு கட்டுரைகளாக வாசிக்கும்போது ‘ரொம்பச் சாதாரணமா இருக்கே' என்று உங்களுக்குத் தோன்றலாம். 'இதையெல்லாம் பயன்படுத்திப் பலன் பெறமுடியுமா?' என்கிற சந்தேகம் வரலாம். அப்போதெல்லாம் ‘ப்ளஸ் ஒன்' என்று ஒருமுறை சொல்லிக்கொள்ளுங்கள்.
‘+1' என்றால் பதினொன்றாம் வகுப்பு அல்ல. நவீன யுகத்தில் அதற்கு அர்த்தமே வேறு.
இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறோம், வேறோர் உயர்ந்த நிலைக்குச் செல்ல ஆசைப்படுகிறோம், ஆனால் அங்கே போவதற்கு நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டியிருக்குமே என்று யோசித்துத் தயங்குகிறோம்.
அதற்குதான், ‘+1' ஃபார்முலா உங்களுக்கு உதவும். புதுப்புது விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்வதுதான் ‘+1', இதன்மூலம் ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று என்று படிப்படியாக முன்னேறி நூறையும் ஆயிரத்தையும் லட்சத்தையும் கோடியையும் தொடுவது சாத்தியமே!
மேலாண்மைத் துறை நிபுணர்கள் இதனை ‘1% முன்னேற்றம்' என்கிறார்கள்.
Please note: This audiobook is in Tamil.
©1998 N. Chokkan (P)2016 Pustaka Digital Media Pvt. Ltd., India