-
サマリー
あらすじ・解説
`எல்லாம் என் தலையெழுத்து' என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். ‘எதுவும் தலைவிதிப்படிதான் நடக்கும். எதையும் நம்மால் மாற்றமுடியாது' என்று தீர்மானமாக அவர்கள் சொல்வார்கள். ‘குருஜி, தலையெழுத்தை மாற்றவே முடியாதா?' என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘நிச்சயமாக முடியும்' என்பதே என் பதில். மாற்றுவது என்ன மாற்றுவது? அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடலாம். இந்த உலகத்தில் மாற்றமுடியாதது எதுவுமே இல்லை. ஆனால், தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் அது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். நீங்கள் இந்தியாவில் கார் ஓட்டுகிறீர்கள். இந்தியாவில் வாகனம் ஓட்டும்போது இடப்பக்கம் செல்ல வேண்டும் என்பதுதான் சாலை விதி. அதைத் தெரிந்துகொண்டு எல்லோரும் ஓட்டுகிறார்கள். ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். அங்கு வலப்பக்கம்தான் வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்பது விதி. அவருக்கு இந்தியாவின் வாகனச் சட்டம் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் காரை வலப் பக்கமாக ஓட்டிச் செல்கிறார். எதிரே வரும் ஏராளமான வாகனங்களைக் கண்டு திகைக்கிறார். அவர் செய்வது விதிமீறல். அதன் விளைவாக விபத்துகள் நடக்கலாம், காயங்கள் ஏற்படலாம், காவலர்கள் அவருக்கு அபராதம் விதிக்கலாம். இப்படி என்ன வேண்டுமானாலும் நிகழலாம்.